» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செயற்கை கருத்தரிப்பு குழந்தைகளின் சங்கமம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 8:04:55 PM (IST)
குரு மருத்துவமனை - அனிஷ் செயற்கை கருத்தரிப்பு மையம் சாா்பில் செயற்கை கருத்தரிப்பின் மூலமாக பிறந்த குழந்தைகளின் சங்கமம் விழா குரு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு குரு மருத்துவமனை - அனிஷ் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.கல்பனா குழந்தையின்மைக்கான சிகிச்சையின் தனது 25 வருட கால அனுபவத்தை விளக்கி கூறினார் மற்றும் குரு மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.ஜி.பாலமுருகன் தலைமை தாங்கினாா்.
இந்த விழாவில் குரு மருத்துவமனை - அனிஷ் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த 100க்கும் மேற்பட்ட செயற்கை கருத்தரிப்பு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோா்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக இம்மையத்தில் பிறந்த செயற்கை கருத்தரிப்பு குழந்தைகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து இவ்விழாவில் டாக்டர் பி.கல்பனா தேசிய அளவிலான FOGSI Infertility Committee தலைவராக தேர்ந்தெடுக்கபட்டத்தை கொண்டாடும் விதமாக குரு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்த குழந்தைகள் இதனை கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருத்தினராக முன்னாள் தமிழக அமைச்சரும், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமாா் அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் முற்றிலும் இலவசமாக முழு உடல் பரிசோதனைக்கான (மாஸ்டர் ஹெல்த் செக்அப்) அட்டை வழங்கப்பட்டது.