» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இபிஎஸ் கோரிக்கை ஏற்பு: தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்!
புதன் 14, பிப்ரவரி 2024 9:57:43 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு ஆர்.பி. உதயக்குமாரை நியமித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை எதிர்க்கட்சி தலைவரின் இருக்கை அருகிலேயே இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் அப்பாவு எந்த முடிவும் எடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் அருகருகே இருக்க வேண்டும். இதுதான் மரபு. இதை பல முறை கோடிட்டு காட்டியும் சபாநாயகர் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்தார். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)




