» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கத்திமுனையில் பைக் பறிப்பு: 4பேர் கும்பல் கைவரிசை - தூத்துக்குடியில் துணிகரம்!!

புதன் 14, பிப்ரவரி 2024 10:38:55 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மாரிமுத்து (21). இவர் நேற்று மதியம் புதிய துறைமுகம் பகுதியில் இருந்து பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் ரவுண்டான அருகே 4பேர் அவரை லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தியுள்ளனர்.

அவர் பைக்கை நிறுத்தியதும் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணம் மற்றும் அவரது மோட்டார் பைக்கை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து  அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory