» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல்: 12-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்!

ஞாயிறு 4, ஜனவரி 2026 9:32:00 AM (IST)

சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வருகிற 9-ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத்தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. காலை 9.30 மணியில் மாலை 6.15 மணி வரை நடக்கிறது.

அதன்படி 9-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, நாமக்கல், சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு.

10-ஆம் தேதி கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தஞ்சை கிழக்கு, தஞ்சை மேற்கு, தஞ்சை மத்தியம், தஞ்சை தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மாநகர், நெல்லை புறநகர், விருதுநகர் கிழக்கு, திருவாரூர், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு.

11-ஆம் தேதி விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி.

12-ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை மத்தியம், வேலூர் மாநகர், வேலூர் புறநகர், ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர்.

13-ஆம் தேதி திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சீபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), புதுச்சேரி மாநிலம், கேரளா மாநிலம், சென்னை புறநகர், வடசென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு).

இந்த நேர்காணலில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்த `தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory