» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 4:34:45 PM (IST)

குலசேகரத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோ கல்லூரி வளாகத்தில் இன்று (03.01.2026) நடைபெற்றது.
இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்" தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சுகாதாரத்துறையில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, கலைஞரின் வரும்முன் காப்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 02.08.2025 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமினை தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்தார்கள்.
தொடர்ந்து இன்று பொன்மனை, குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகள் மற்றும் பேச்சிப்பாறை, சுருளகோடு, அயக்கோடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோ கல்லூரி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், பொது மருத்துவம் கண்கள் காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், ஆயுஸ் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் இருதய நிபுணர், எலும்பு முறிவு, நரம்பியல் சிகிச்சை, முதல்வர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட 17 துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பரிசோனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு முகாம்களில் பரிசோதிக்கப்படும் ஆய்வக சோதனைகளின் முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படுகிறது. மருத்துவப் பயனாளிகளின் வருகை பதிவு, மேற்கொள்ளும் சிகிச்சைகள் என அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறதா எனவும், ஒவ்வொரு மருத்துவப் பயனாளிக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் சிகிச்சைகள் பதிவு செய்யப்படுகிறதா எனவும், அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ பயனானர்களிடம் கேட்டறியப்பட்டது
தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, தெரிவித்தார்.
மருத்துவ முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த், இணை இயக்குநர் மருத்துவம் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், முகாம் ஒருங்கிணைப்பாளர் மரு.பிவீனா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருண், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே அந்தியோதயா ரயில் மீது கல்வீச்சு: வடமாநில வாலிபர் கைது
திங்கள் 5, ஜனவரி 2026 8:32:13 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 8:40:14 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 1:06:11 PM (IST)

அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல்: 12-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:32:00 AM (IST)

தாமிரபரணி தூய்மை திட்டம் உருவாக்க ராஜஸ்தான் நிபுணர் நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:02:51 AM (IST)

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)


