» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன் நடிகை கவுதமி பேட்டி!

புதன் 14, பிப்ரவரி 2024 8:33:11 PM (IST)



மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளதாக நடிகை கவுதமி கூறினார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார். இதைதொடர்ந்து, நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அதிமுக. அதிமுகவில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

நான் களத்தில் இறங்கி வேலை செய்ய சரியான இடம் கிடைத்துள்ளது. பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கமாக கூற உரிய நேரம் வரும். ஜெயலலிதாவிற்கு பிறகு, ஈபிஎஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

மக்கள்Feb 16, 2024 - 10:51:02 AM | Posted IP 162.1*****

கூத்தாடிகள் செல்லும் இடமெல்லாம்ல் உருப்படாது . வார்டு கவுன்சிலர் ஆகாமல் நேராக பதவி வெட்க கேடு

JAY JAY JAYJan 5, 1708 - 01:30:00 PM | Posted IP 172.7*****

கமல் திமுக , இவர் அதிமுக , நல்ல நடிப்புடா .....மக்கள் சேவை என்றால் சின்ன திரை நடிகர் பாலா போல அவர் பணத்தை போட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்கள் பணத்தை போட்டு மக்களுக்கு தொண்டு செய்யுங்கள் . கட்சியில் சேர்ந்து ஏதாவது பதவிக்கு வர ஆசை. ஜெ . இருந்தவரை எந்த நடிகையையும் அதிமுகவில் நெருங்க விடமாட்டார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory