» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: 22,078 மாணவ மாணவியர்கள் எழுதினர்!!

வெள்ளி 1, மார்ச் 2024 3:22:34 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 22,078 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (01.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று முதல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 22,078 (இருபத்தி இரண்டாயிரத்து எழுபத்தி எட்டு) மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். 

இதில் 263 பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் 85 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பணிக்காக 1519 அறை கண்காணிப்பாளர்களும், 180 நிலையான படை உறுப்பினர்களும், 7 அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட 21 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதிட சலுகை வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் 129 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வறையில் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படுவார்கள். வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5,552 மாணவர்களும் 5,861 மாணவிகளும் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 4,949 மாணவர்களும், 5,716 மாணவிகளும் என மொத்தம் 22,078 மாணவ மாணவிகள் தேர்வெழுத உள்ளார்கள். மேலும் தனித்தேர்வர்களுக்கு என 6 தேர்வு மையங்களிலும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory