» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணியில்தான் விசிக போட்டியிடும்: திருமாவளவன் திட்டவட்டம்!

சனி 2, மார்ச் 2024 5:29:40 PM (IST)

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும், இதில் எந்த மாற்றமும் கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ""தேர்தல் பணிகள் தொடர்பாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நிலை கூட்டம் நடைபெற்றாததால் திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியவில்லை. தொகுதி பங்கீடு குறித்து தேவைப்பட்டால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசுவோம்.

திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்போம், 2 தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதி கேட்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம், எந்த குழப்பமும் இல்லை. திமுக கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து, அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை, திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக உள்ளோம்.

திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என்று யாரும் இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டாம். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும், இதில் எந்த மாற்றமும் கிடையாது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory