» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

‘யார் பணம் தந்தாலும் தாமரைக்கு ஓட்டுப் போடுங்கள்: மத்திய அமைச்சர் சொல்கிறார்

ஞாயிறு 3, மார்ச் 2024 10:22:42 AM (IST)

யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு தாமரைக்கு ஓட்டுப்போடுங்கள் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தக்கலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. தொகுதி அமைப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் உன்னி கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் குமரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், மத்திய இணை மந்திரியுமான வி.கே.சிங் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை மக்கள் மனதில் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். தமிழ்நாடு போல் சில மாநிலங்களில் தேர்தலில் பண பலம் முக்கியமானதாக இருக்கிறது.

பிற கட்சிகள் பணம் கொடுப்பதை வாங்கி கொள்ளுங்கள், அது அவர்கள் கொள்ளையடித்த பணம் தான். அதிலிருந்து தான் ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆனால் ஓட்டை தாமரைக்கு போட வேண்டும் என்பதை மக்களிடம் நீங்கள் கூற வேண்டும்.

மேலும் பொதுமக்களிடம் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் குடிநீர் இணைப்பை ஊராட்சிகள் தந்தாலும் அதற்கான பணத்தை மத்திய அரசு கொடுக்கிறது. இது மத்திய அரசு திட்டம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கொரோனா காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ இலவச அரிசியை மத்திய அரசு வழங்கியது. அந்த திட்டம் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த இலவச அரிசியை மாநில அரசு கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறும்போது, மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலில் எங்களுடன் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. என யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார்? என்பது குறித்து ஆலோசனை நடத்தி தலைமை அறிவிக்கும். தேர்தல் பயத்தில் மோடி உள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் பயத்தினால் அவர் இது போன்ற கருத்துகளை பேசி வருகிறார் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory