» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் காவலர் தூக்கு போட்டு தற்கொலை: திருமணம் ஆன ஏழு மாதங்களில் சோகம்!

ஞாயிறு 24, மார்ச் 2024 6:44:12 PM (IST)

தூத்துக்குடியில் திருமணம் ஆன ஏழு மாதங்களில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி ஸ்பிக் நகரை சேர்ந்தவர் ஹரிப்பிரியா ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். ஹரிப்பிரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கடந்த 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்தோணி ஜெனிட் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. 

அந்தோணிஜெனிட்டிற்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்நிலையில் ஏற்கனவே ஹரிபிரியாவுக்கும் பாண்டிச்சேரியை சேர்ந்த சேர்ந்த நவநீத பிரியா என்ற பெண் காவலருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த பெண் கமாண்டோ போலீஸ்க்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் நவநீத பிரியா பெண்ணாக இருந்து மருத்துவ சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர். 

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹரிப்பிரியா விடுமுறை எடுத்துக்கொண்டு தனது கணவரிடம் சென்னைக்கு பணி நிமித்மாக செல்வதாக கூறி சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து கணவர் அந்தோணி ஜெனிட் ஹரிப்பிரியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததை தொடர்ந்து அவரின் செல்போன் என்னை தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர் ஹரிப்ரியா தனது கணவரிடம் கோவில்பட்டியில் இருப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்தோணி ஜெனிட் ஹரி பிரியாவின் குடும்பத்தினருடன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் காவல் துறையினருக்கு ஹரி பிரியாவை காணவில்லை என்று புகார் அளித்து தேடி உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டதில் அவர் பாண்டிச்சேரியில் தனது நண்பரான நவநீத பிரியாவுடன் இருப்பதை தெரிய வந்தது.

இத அடுத்து பாண்டிச்சேரி அருகே திண்டிவனத்தில் ஒரு தனியார் பேருந்தில் இருவரும் இருக்கும்போது நவநீத பிரியாவிடமிருந்து ஹரி பிரியாவை கணவர் அந்தோணி ஜெனிட் மற்றும் ஹரிப்பிரியாவின் குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பிற்கு கடந்த 22 ஆம் தேதி கூட்டி வந்துள்ளனர். ஹரிப்பிரியாவை அழைத்து வரும்போது தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே உள்ள கசங்காத பெருமாள் ஆலயத்தில் வழிபட்டு விட்டு வரும்போது ஹரிப்பிரியா குடும்பத்தினரின் பிடியிலிருந்து தப்பி லாரியில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

அப்போது அவரை மீட்டு குடும்பத்தினர் வீட்டிற்கு கூட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் அந்தோணி ஜெனிட் உள்ளறையில் படுத்து இருக்கும் போது வெளியே இருந்த அறையில் ஹரிப்பிரியா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory