» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: அண்ணாமலை, எல் முருகன் மறியல்!

திங்கள் 25, மார்ச் 2024 3:58:51 PM (IST)



நீலகிரியில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, வெளியில் இருந்த தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், சில தொண்டர்கள் காயமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 25) பா.ஜ., தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் தொண்டர்களை நோக்கி தடியடி நடத்தினர். இதனால் பா.ஜ., தொண்டர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.Image 1249172போலீசாரின் தடியடியில் சில பா.ஜ., தொண்டர்கள் காயமுற்றதாக கூறப்படுகிறது. 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலை, ''ஊட்டி எஸ்.பி சுந்தர வடிவேல் பணியிடை நீக்கம் செய்யும்வரை போராட்டம் தொடரும்'' எனக் கூறி எல்.முருகன் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின்போது எஸ்.பி சுந்தரவடிவேல், தடியடி தொடர்பாக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்த அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று காயமுற்ற தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory