» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை: ராகுல் காந்தி பேச்சு

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:24:11 AM (IST)

"பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரியில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று ஹெலிகாப்டர் மூலமாக வருகை தந்தார். அப்போது அங்கு இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து கூடலூரில் பரப்புரை ஆற்றிய ராகுல் காந்தி பேசியதாவது: ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. ஒரே நாடு, ஒரே தலைவர் என தவறாக வழிநடத்த பார்க்கிறார் பிரதமர் மோடி. 

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. இந்தியாவின் இயல்பை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. பன்முகத்தன்மை, சமூகநீதியை அழித்து ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை புகுத்த நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory