» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணாமலை என்று பெயர் வைத்திருந்தால் அவர் என்ன சூப்பர் ஸ்டாரா?- செல்லூர் ராஜூ!

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:45:09 AM (IST)

அண்ணாமலை என்று பெயர் வைத்துக் கொண்டால் அவர் என்ன சூப்பர் ஸ்டாரா? அவர் எங்களுக்கு ‘ஜூஜூபி’. என்று  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேலமாசி வீதி பகுதியில் வசிக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு தலைப்பாகை, பாசி மணி மாலையை வடமாநிலத்தவர்கள் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட செல்லூர் ராஜூ, பாசி மணி மாலையை கழற்ற முயன்றார். அருகில் இருந்த நிர்வாகிகள், அண்ணே, பாசமாக வடமாநிலத்தவர்கள் அணிவித்த பாசி மணி மாலையை கழற்ற வேண்டாம் என்றனர். அதற்கு, ‘ஏம்பா, என்னை இந்த படத்தோடு மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவாங்களேப்பா?’ என்று சிரித்தபடி கேட்டார் செல்லூர் ராஜூ.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக அழிந்துபோய்விடும் என்று அண்ணாமலை சொல்கிறார். அவர் என்ன ஜோசியரா? விசுவாமித்திரரா? எத்தனை முறைதான் அவருக்குப் பதிலடி கொடுப்பது. அரசியல் என்றாலே அண்ணாமலைக்கு என்னவென்று தெரியவில்லை.

அரசியல் அரிச்சுவடி தெரியாத அவரை பற்றி பேசுவதால் எந்தப் பலனும் இல்லை. அதிமுக இவரைப்போல் எத்தனையோ பேரை பார்த்துள்ளது. அண்ணாமலை என்று பெயர் வைத்துக் கொண்டால் அவர் என்ன சூப்பர் ஸ்டாரா? அவர் எங்களுக்கு ‘ஜூஜூபி’. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Apr 16, 2024 - 07:34:33 AM | Posted IP 162.1*****

அட தெர்மோகோல் விஞ்ஞானி 😁😁😁. உன் அறிவை கண்டு உலகமே கேவலமாக சிரிக்கிறது 🤣🤣😀

அரசியல்Apr 15, 2024 - 04:07:49 PM | Posted IP 172.7*****

செபாஸ்டியன் சீமான் போல கோமாளி ஆகிவிட்டார்......

tamilanApr 15, 2024 - 01:42:04 PM | Posted IP 172.7*****

இவர் சினிமாவில் வரும் அண்ணாமலை அல்ல. அரசியல் சதுரங்க வேட்டையில் வெற்றி கொடி கட்டும் நிஜ கதாநாயகன் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory