» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி காலமானார் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 10:05:23 AM (IST)

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி (73) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா்.

சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் சில காலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த இந்திரகுமாரி  சிகிச்சை பலனின்றி நேற்று திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு காலமானாா். 

1991-96 காலகட்டத்தில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சராக இந்திரகுமாரி பணியாற்றினாா். பின்னா், 2006-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அவா், திமுக இலக்கிய அணி தலைவராகச் செயல்பட்டு வந்தாா். 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தி.மு.க. இலக்கிய அணி தலைவர் இந்திரகுமாரி, மறைந்த துயர செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான இந்திரகுமாரி, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று மக்களுக்கு பணியாற்றியவர். தீராத தமிழ் புற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு தி.மு.க.வுக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும்.

இந்திர குமாரியை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உடன்பிறப்புகளுக்கு என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory