» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் நாளை கனிமொழி இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 3:11:18 PM (IST)தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நாளை (ஏப்.17) இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

இது தொடர்பாக திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்கள். கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்துவரும் அவர் நாளை 17.04.2024 புதன்கிழமை அன்று தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில்இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் செய்திட இருக்கிறார்.

அதன்படி 17.04.2024 புதன்கிழமை மாலை 3.00 மணி அளவில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு புதிய பேரூந்து நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரம் செய்யும் அவர் தொடர்ச்சியாக மாலை 3.30 மணி அளவில் கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலம்பட்டி விலக்கில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில்கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

அதன்பின் மாலை 4.00 மணி அளவில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரம் பேரூந்து நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.இறுதி கட்டமாக மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி V.V.D. மெயின் ரோடு, அண்ணாநகர் 7 - வது தெரு டூவிபுரம் 5 வது தெரு சந்திப்பில் I.N.D.I.A கூட்டணி நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

அந்தந்த பகுதிக்கு உட்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடவும், I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory