» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:18:11 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் இன்று குவிந்த திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், மேலும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டியும் விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் ரூ.100 தரிசன கட்டண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 

கோவிலில் இருந்து வாகனங்கள் பஸ் நிலையம் கடந்து வெளியே வரமுடியாமல் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஏராளமான பக்தர்கள் கூடியதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory