» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் பல பேய்களை ஓட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறேன்: அண்ணாமலை
வியாழன் 11, ஜூலை 2024 4:51:14 PM (IST)
தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன். இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள் என்று தன்னை வேதாளம் என விமர்சித்த ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
  சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, தேச விடுதலைக்காக, இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, தேச விடுதலைக்காக, இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு, மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று, மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு, மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், இறுதிவரை பின்வாங்காமல், அச்சமின்றிப் போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
 அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தன்னை வேதாளம் என விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கிறது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்டத்தான். 
 ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நிறைய பேய்கள் இருப்பதால் இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள் என்று அண்ணாமலை பதிலளித்தார். அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்க கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது என குற்றம்சாட்டினார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் : பள்ளி செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:44:27 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)

பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்புமிக்க மரம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:06:56 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST)




