» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம்... கொலீஜியம் பரிந்துரை!
வெள்ளி 12, ஜூலை 2024 12:28:38 PM (IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜனாதிபதி உத்தரவின்படி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் கடந்த மே 24-ந்தேதி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் நேற்று கூடியது. இதில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனையும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங்கையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைத்துள்ள நிலையில், அவரது இடத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈ.வெ.ரா. வந்த பின்தான் பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தாரா? சீமான் கேள்வி
வியாழன் 25, டிசம்பர் 2025 9:04:57 PM (IST)

அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
வியாழன் 25, டிசம்பர் 2025 8:45:54 PM (IST)
_1766667787.jpg)
இருக்கன்குடி பாதையாத்திரை சென்ற 3பேர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 6:33:31 PM (IST)

தவெக வேட்பாளர்களின் பெயரையாவது விஜயால் சொல்ல முடியுமா?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
வியாழன் 25, டிசம்பர் 2025 5:41:01 PM (IST)

குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படுமா? தேர்வாணையம் விளக்கம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:15:58 PM (IST)

பாஜகவின் முதல் அடிமை திமுகதான்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!
வியாழன் 25, டிசம்பர் 2025 12:09:23 PM (IST)

