» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்குகளில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
புதன் 17, ஜூலை 2024 9:30:42 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பட்டினமருதூர் பகுதியில் கடந்த 22.06.2024 அன்று பட்டினமருதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் சண்முகசுந்தரம் (57) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் பட்டினமருதூர் மேற்கு தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் இளையராஜா (45) என்பவரை தருவைகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து செய்தனர்.
புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தா சாலையில் கடந்த 24.06.2024 அன்று ஆலந்தா வடக்கு காலனி தெருவை சேர்ந்த பலவேசம் மகன் கருப்பசாமி (79) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் கருப்பசாமியின் மகனான சின்னத்துரை (45) என்பவரை புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான 2பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் அவர்கள் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேர், மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 13பேர், உட்பட 104 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)




