» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்

திங்கள் 29, டிசம்பர் 2025 5:22:52 PM (IST)



குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8வது கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் இன்று பீமநகரி ஊராட்சிக்குட்பட்ட வேம்பத்தூர் பகுதியில் 8வது சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்து, தெரிவிக்கையில்- கால்நோய், வாய்நோய் ஆனது பிளவுப்பட்ட குளம்புள்ள கால்நடை இனங்களான பசு மற்றும் எருமைகளுக்கு பரவும் நோயாகும். 

இந்நோய் தாக்கப்படும் கால்நடைகளுக்கு காய்ச்சல், பசியின்னை, அதிக அளவு உமிழ்நீர் சுரப்பு, கால், வாய் மற்றும் மடிக்காம்புகள் இவற்றில் கொப்பளங்கள் ஏற்படும். இது காற்றில் பரவும் நோய் ஆகும். இதனால் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளில் பால் உற்பத்தி குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும். நோய் தாக்கப்பட்ட பசுக்களில் பால் அருந்தும் கன்றுகள் இறக்க நேரிடும். இந்த நோயிலிருந்து கால்நடைகளை காத்திட தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 7 சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி பணிகள் நடந்துள்ளது. தற்போது 8வது சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி பணி இன்று (29.12.2025) முதல் 28.01.2026 வரை நடைபெற உள்ளது. 8வது சுற்றில் சுமார் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டிட இலக்கு நிர்ணயித்து கால்நடை பராமரிப்புத்துறை செயல் திட்டம் வகுத்துள்ளது. 

நமது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறையை சார்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர்களை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டு, இப்பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால்நோய் வாய்நோயினால் தங்களுக்கு ஏற்படும் உற்பத்தி இழப்பை தடுத்திட இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களிடம் உள்ள நான்கு மாத வயதிற்கு மேலான அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் கால்நடை பாராமரிப்புத்துறை மரு.முகம்மது கான், கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள், கால்நடை விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory