» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின் இணைப்பு இல்லாத வி.ஏ.ஓ அலுவலகம்: தூத்துக்குடியில் அவலம்!!
புதன் 31, ஜூலை 2024 3:03:38 PM (IST)
தூத்துக்குடியில் அய்யனடைப்பு வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே அய்யனடைப்பு கிராமம் உள்ளது. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 6 மாத காலமாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது. தனி இணைப்பு இல்லாததால் அருகில் உள்ள ரேஷன் கடையில் இருந்து மின் சப்ளை வந்துள்ளது. அதனை மின் மின்வாரிய அலுவலர்கள் துண்டித்து விட்டனர்.
கிராமங்களை காக்க வேண்டிய நிர்வாக அலுவலகத்திலேயே மின் இணைப்பு இல்லாமல் இப்படியொரு நிலை என்றால் கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய வேண்டிய அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு எப்படிச் சென்றடையும். எனவே மாவட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.