» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உதயநிதி உத்தரவின்பேரில் என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு: சவுக்கு சங்கர்
புதன் 31, ஜூலை 2024 4:57:26 PM (IST)
அமைச்சர் உதயநிதி உத்தரவின்பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருவதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

அவினாசி கிளை சிறையில் இருந்து இன்று சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் 17 போலீஸார் அழைத்து வந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திடீரென வயிற்று வலி எனக்கூறி வேனில் மயக்கமடைந்துள்ளார்.உடனடியாக அவரை மதியம் 12.30 மணியளவில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பின் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே என் கைதுக்கு அமைச்சர் உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின்பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் : காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:09:26 PM (IST)

கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:57:52 PM (IST)

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்: சட்டப்பேரவையில் பரபரப்பு !
வியாழன் 16, அக்டோபர் 2025 12:21:15 PM (IST)

வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: ஸ்டாலின், உதயநிதி, இபிஎஸ் மரியாதை!
வியாழன் 16, அக்டோபர் 2025 11:57:20 AM (IST)

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 16, அக்டோபர் 2025 11:46:10 AM (IST)

நெல்லை, தூத்துக்குடியில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பெரிய மழை: பிரதீப் ஜான்!
வியாழன் 16, அக்டோபர் 2025 11:08:14 AM (IST)
