» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் பகுதியில் நாளை மின்தடை!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 5:20:13 PM (IST)
நாகர்கோவில் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விருப்ப மனு கட்டணத்தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:35:03 AM (IST)

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு தோல்வி பயமே காரணம்: கனிமொழி கருத்து!
புதன் 8, ஏப்ரல் 2026 10:26:42 AM (IST)

தேர்தல் பொது பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பங்கேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 10:13:57 AM (IST)

வேன் மோதி இளம்பெண் பலி: பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் படுகாயம்!
புதன் 8, ஏப்ரல் 2026 8:30:32 AM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இருவழிப் பாதை: கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:47:33 PM (IST)

