» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சேவைக் குறைபாடு: அரசு போக்குவரத்து கழகம் ரூ.10,149 இழப்பீடு வழங்க உத்தரவு!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 5:54:51 PM (IST)

சேவைக் குறைபாடு காரணமாக அரசு போக்குவரத்து கழகம் 10,149 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. 
 
தூத்துக்குடி கதிர்வேல்நகர் மேற்கு பகுதியைச் சார்ந்த சதீஸ்குமார் என்பவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு அரசுப்பேருந்தில் பயணம் செய்தார். அப்போது 51 ரூபாய் பயணச்சீட்டிற்கு ரூபாய் 200  நடத்துனரிடம் கொடுத்து விட்டு மீதி பாக்கித் தொகை ரூபாய் 149 ஐ கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தற்போது தன்னிடம் சில்லறை இல்லை எனவும், சிறிது நேரம் கழித்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். பின்பு புகார்தாரர் ஆலங்குளம் வந்தவுடன் பாக்கித் தொகையை கேட்டுள்ளார். 

அப்போதும் நடத்துனர் பாக்கித் தொகையை கொடுக்காமல் கால தாமதம் ஆக்கி வந்துள்ளார். அதன் பின்னர் புகார்தாரர் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதால் அப்போதும் பாக்கித் தொகையை கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தரக்குறைவாக பேசி அவரை இறக்கி விட்டு விட்டார். இதனால் புகார்தாரர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாருக்கு முறையான பதில் அளிக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதீஸ்குமார் பின்பு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர்,  நமச்சிவாயம் ஆகியோர் பாக்கித் தொகை ரூபாய் 149, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 5,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 10,149 ஐ வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory