» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆபாச செயலி மூலம் வாலிபர்களை அழைத்து நகை, பணம் பறிப்பு: ஒருவர் கைது!
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:20:37 PM (IST)
செல்போனில் ஆபாச செயலி மூலம் சாட்டிங் செய்து பல வாலிபர்களிடம் நகை, பணத்தை வழிப்பறி செய்த கும்பலைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய அரசு ஊழியர் ஒருவர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘என்னை ஆரல்வாய்மொழி-தேவசகாயம் மவுண்ட் 4 வழிச்சாலைக்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். அங்கு மறைந்திருந்த சக நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து என்னை மிரட்டி 2 பவுன் நகை, ரூ.52 ஆயிரத்து 500 ஆகியவற்றை பறித்து சென்றார்’ என கூறியிருந்தார்.
இதுபற்றி போலீஸ் உயர் அதிரிகாரிகளின் உத்தரவின்பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கும்பலை தேடி வந்தனர். முதலில் புகார் அளித்தவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அதாவது ஓரினசேர்க்கை விரும்பிகளை இணைக்கும் வகையில் செல்போன் ஆபாச செயலி உருவாக்கி அதன்மூலம் வாலிபர்களை சிலர் இணைத்து சாட்டிங் செய்து வந்துள்ளனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரை இணைந்துள்ளனர். இதையடுத்து களக்காட்டை சேர்ந்த சரவணன் (வயது 31) என்பவர் அரசு ஊழியரை 4 வழிச்சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த 2 பேர் சேர்ந்து அவரை மிரட்டி பணம், நகையை பறித்து சென்றது ெதரிய வந்தது.
இதையடுத்து போலீசார், அந்த செயலி மூலம் சரவணனை 4 வழிச்சாலைக்கு வரவழைத்தனர். பின்னர், அவரை மடக்கிப்பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஒரு கும்பல் சரவணனை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சரவணனை கைது செய்தனர். சரவணனின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கும்பலிடம் குமரி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்கள் பலர் சிக்கி தவிப்பது தெரிய வருகிறது. தலைமறைவாக உள்ள 2 பேரும் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது. இந்த கும்பலிடம் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பில் இருந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
மேலும் போலீசார் கூறும்போது, நாகர்கோவில் 4 வழிசாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபாச செயலியில் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி யாராவது தொடர்பு கொண்டால் உடனே போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:35:30 PM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார் என்பது 2 நாளில் அம்பலமாகும்: ராமதாஸ் பேட்டி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:20:08 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்தவனை சுட்டுக் கொல்ல வேண்டும்: தாய் ஆவேசம்
வெள்ளி 18, ஜூலை 2025 4:40:58 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை!
வெள்ளி 18, ஜூலை 2025 3:09:42 PM (IST)

போதையில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் : பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 18, ஜூலை 2025 12:15:21 PM (IST)
