» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஊருணியில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப சாவு : நண்பர்களுடன் குளித்தபோது சோகம்!
திங்கள் 16, மார்ச் 2026 8:30:48 AM (IST)
சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து கிராமத்தில், ஊருணியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்த மேரி என்பவரது மகன் ரியான் (6). இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்தான். நேற்று முன்தினம் மாலை, ரியான் தனது நண்பர்களுடன் ஊர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் இருந்த ஊருணிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.
நண்பர்களுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த ரியான், எதிர்பாராதவிதமாக ஊருணியின் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் சிறுவன் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக ஊருக்குள் ஓடிச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்தனர்.
கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் ரியானின் உடலை மீட்டனர். பின்னர் அவனது உடல் உடற்கூறு ஆய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இசக்கித்துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விளையாடச் சென்ற சிறுவன் ஊருணியில் மூழ்கிப் பலியான சம்பவம் படுக்கப்பத்து கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுகுடிக்கப் பணம் கேட்டுத் தகராறு: மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது!
திங்கள் 16, மார்ச் 2026 11:22:22 AM (IST)

பிளஸ்-1 மாணவி, தாயாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: ஆட்டோ ஓட்டுநர் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:00:06 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் கோடை வெப்பத்தைத் தணிக்க சிறப்பு வசதிகள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 16, மார்ச் 2026 7:53:48 AM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு: ஏப். 23-ல் வாக்குப்பதிவு - மே 4ல் ரிசல்ட்..!
ஞாயிறு 15, மார்ச் 2026 6:16:47 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

