» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதியின் 6-வது நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

புதன் 7, ஆகஸ்ட் 2024 12:37:53 PM (IST)



முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி மறைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில், தற்போது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.  இதில் கனிமொழி எம்பி உட்பட பலர் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory