» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் ஆக.15ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் - ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 12:36:58 PM (IST)
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சுதந்திர தினமான 15.08.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண்வரம்பின் படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 15.08.2024 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள்; குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொது மக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈ.வெ.ரா. வந்த பின்தான் பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தாரா? சீமான் கேள்வி
வியாழன் 25, டிசம்பர் 2025 9:04:57 PM (IST)

அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
வியாழன் 25, டிசம்பர் 2025 8:45:54 PM (IST)
_1766667787.jpg)
இருக்கன்குடி பாதையாத்திரை சென்ற 3பேர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 6:33:31 PM (IST)

தவெக வேட்பாளர்களின் பெயரையாவது விஜயால் சொல்ல முடியுமா?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
வியாழன் 25, டிசம்பர் 2025 5:41:01 PM (IST)

குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படுமா? தேர்வாணையம் விளக்கம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:15:58 PM (IST)

பாஜகவின் முதல் அடிமை திமுகதான்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!
வியாழன் 25, டிசம்பர் 2025 12:09:23 PM (IST)

