» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி வருகை தந்துள்ள அயலக தமிழ் மாணவர்கள் - அமைச்சர் வரவேற்பு!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 5:25:21 PM (IST)

வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அயலக தமிழர்வாழ் மாணவர்களை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வரவேற்றார்
கன்னியாகுமரி மாவட்டம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, வருவாய் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த அயலக தமிழர்வாழ் மாணவ மாணவியர்களை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் வரவேற்றார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக "வேர்களைத்தேடி” என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தினை அறிவித்து, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில் முதற்கட்டமாக கடந்த 03.01.2024 அன்று இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் தேர்வாகி சென்னை, தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திர போராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள். இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந்துரையாடல்களும் பயிற்சி வகுப்புகளும் வழக்கப்பட்டது.
இரண்டாம் கட்டபயணமாக, இன்று தென்ஆப்ரிக்காவில் இருந்து 14 இளைஞர்கள், உகாண்டாவில் இருந்து 3 இளைஞர்கள், குவாடலூப்வில் இருந்து 2 இளைஞர்கள், மார்டினிக்வில் இருந்து 3 இளைஞர்கள், பிஜீவில் இருந்து 12 இளைஞர்கள், இந்தோனேஷியாவில் இருந்து 9 இளைஞர்கள், மொரிஷியஸில் இருந்து 13 இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 இளைஞர்கள், மாலத்தீவில் இருந்து 1 இளைஞர், கனடாவில் இருந்து 9 இளைஞர்கள், மியான்மரில் இருந்து 14 இளைஞர்கள், மலேசியாவில் இருந்து 4 இளைஞர்கள், இலங்கையில் இருந்து 9 இளைஞர்கள், பிரான்ஸில் இருந்து 3 இளைஞர்கள், மற்றும் ஜெர்மனியில் இருந்து 1 இளைஞர் என 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத்தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு வேர்களைத்தேடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயணம் கடந்த 01.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து துவக்கி வைத்தார்.
மேலும் இப்பயணமானது 01.08.2024 அன்று சென்னையில் துவக்கி செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய, இடங்களுக்கு பயணித்து சென்னைக்கு வரும் 14.08.2024 அன்று சென்றடைவார்கள். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
அதன் ஒருபகுதியாக வேர்களைத்தேடி திட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அழைத்து செல்லப்பட்டதோடு, அய்யன் திருவள்ளுவர் இயற்றிய உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பு அம்சங்கள் குறித்து, அயலகத் தமிழர் வாழ் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அங்கு எழுதப்பட்டுள்ள திருக்குறளினை வாசித்து அவற்றின் பொருளை கேட்டறிந்தார்கள். இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள்.
இப்பயணத்தின் கடைசி நாளான 15.08.2024 அன்று சென்னையில் உள்ள பெரியார் திடலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தெரிவித்தார். முன்னதாக அயலகத்தமிழர் வாழ் இளைஞர்களை "தமிழ் வணக்கம், தமிழ் வெல்லும்" என்ற முழக்கத்துடன் திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் வழியனுப்பி வைத்தார்.
நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியர் பிளாரன்ஸ் நிர்மலா, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் காமராஜ், பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் லிசி, உதவி சுற்றுலா துறை அலுவலர் த.கீதா, பூம்புகார் ஜீனியர் மேனஜர் ஹரிநாராயணன், குமரி மாவட்ட இந்துசமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா இராமகிருஷ்ணன், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கபிள்ளை, வட்டார வேளாண்மை ஆலோசனை தலைவர் தாமரை பாரதி, வட்டார மருத்துவ ஆலோசனை குழு உறுப்பினர் பாபு, அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணி : கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:46:01 AM (IST)

கோடை விடுமுறையை முன்னிட்டுச் சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:38:48 AM (IST)

போலீசார் சுட்டதில் காயம்: தென்காசியில் பாதுகாப்பு இல்லை - தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட வாலிபர் புகார்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:06:24 AM (IST)

போலி பாலிசி தயாரித்த நெல்லை வாலிபர் கைது : தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
புதன் 29, ஏப்ரல் 2026 8:43:21 PM (IST)

கள்ளக்காதலை எதிர்த்தவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:00:02 PM (IST)


