» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணி : கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:46:01 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பணிகளைத் துல்லியமாகக் கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒருவர் வீதம் மொத்தம் 6 பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு, மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் என பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், தற்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த 3 மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகளைக் கூடுதலாகத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி ஏற்கனவே நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ் தூத்துக்குடி தொகுதிக்கும். சோடிங்புயீ ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கும், அரவிந்த் குமார் வெர்மா ஓட்டப்பிடாரம் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக இருப்பார்கள். விளாத்திகுளம் தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாநில சிவிஸ் சர்வீஸ் அதிகாரி தீபக் வசந்த் கிர்ஷ்சாகர், திருச்செந்தூர் தொகுதிக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி பாரத் பூஷன் பிரசாத், கோவில்பட்டி தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி ஜித்தேந்திர சாகேப்ராவ் ககுஸ்தே ஆகியோர் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நியமிக்கப்பட்டுள்ள 6 பார்வையாளர்களும் வரும் மே 2-ஆம் தேதி தூத்துக்குடி வந்தடைவார்கள். அன்றிலிருந்து அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)

மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு: அரசாணையை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:43:33 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

கோடை விடுமுறையை முன்னிட்டுச் சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:38:48 AM (IST)

போலீசார் சுட்டதில் காயம்: தென்காசியில் பாதுகாப்பு இல்லை - தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட வாலிபர் புகார்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:06:24 AM (IST)

போலி பாலிசி தயாரித்த நெல்லை வாலிபர் கைது : தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
புதன் 29, ஏப்ரல் 2026 8:43:21 PM (IST)


