» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது குறித்துக் கேட்டபோது முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஜூன் 15, 2026 அன்று விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிலேயே தான் தங்குவதற்கு அனுமதி கோரி சங்கீதா தரப்பில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விஜய் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் பரபரப்பான சூழலில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது வழக்கமான நிர்வாக ரீதியிலான இடமாற்றமா அல்லது இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையா என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு: அரசாணையை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:43:33 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணி : கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:46:01 AM (IST)

கோடை விடுமுறையை முன்னிட்டுச் சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:38:48 AM (IST)

போலீசார் சுட்டதில் காயம்: தென்காசியில் பாதுகாப்பு இல்லை - தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட வாலிபர் புகார்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:06:24 AM (IST)

போலி பாலிசி தயாரித்த நெல்லை வாலிபர் கைது : தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
புதன் 29, ஏப்ரல் 2026 8:43:21 PM (IST)


