» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார்: இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

சனி 10, ஆகஸ்ட் 2024 11:20:28 AM (IST)

கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக புகார் எழுந்ததால் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

குமரி மாட்டத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் மற்றும் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை சிலர் மலிவான விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். 

இதனை கொல்லங்கோடு உள்பட எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தாமஸ், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பல்வேறு புகார் வந்தது. இதுதொடர்பாக ரகசியமாக கண்காணிக்க எஸ்பி சுந்தரவதனம், சில போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமன்னம் பகுதியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 350 லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் தாமஸ் அந்த மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. 

இதற்கிடையே வேறொரு கும்பல் அந்த மண்எண்ணெய்யை திருடி சென்று விற்பனை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டரை கண்காணித்து வந்த ரகசிய போலீசார் இந்தசம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆதாரத்துடன் எஸ்பிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமசை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட விவகாரம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory