» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மழைநீர் வடிகால்வாயில் கொசுவலை போர்த்தியது ஏன்? - மேயர் பிரியா விளக்கம்
சனி 24, ஜனவரி 2026 3:32:33 PM (IST)

மழைநீர் கால்வாயில் கொசுவலை பொருத்தியது சர்ச்சையாக்கும் வகையில் அது பெரிய விஷயம் இல்லை என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கடி காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் பரவி வருகின்றன.
இதையடுத்து சென்னையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கவுன்சிலர்களிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தி வருகிறார்கள். முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்தது.
மழைநீர் வடிகால்வாயில் உள்ள தொட்டிகளின் மூடியை திறந்து அதில் கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.
சென்னை மாநகராட்சி ஊழியர்களின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியது. இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிட்ட சம்பவத்தை தொடர்புபடுத்தி வீடியோக்கள் பரவின.
இந்த நிலையில் மழைநீர் கால்வாயில் கொசுவலை பொருத்தியது தொடர்பாக மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடத்தை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், 'மழைநீர் வடிகாலில் கொசுவலை போர்த்திய வீடியோ வைரலாகி வருகிறதே? அது தொடர்பான விமர்சனங்கள் எழுகிறதே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, 'மழைநீர் கால்வாயில் கொசுவலை போர்த்துவது கொசுக்களுக்காக போடுவது கிடையாது. கவுன்சிலர் ஒருவர் வேண்டுகோள் வைத்ததால் போடப்பட்டது. மாநகராட்சியில் அறிவிப்பாக வெளியிட்டு போடப்பட்டது கிடையாது. ஒரு கவுன்சிலர் ஐடியா கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போட்டு இருக்கிறார்கள். இந்த அளவுக்கு சர்ச்சையாக்கும் வகையில் அது பெரிய விஷயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு
சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
சனி 24, ஜனவரி 2026 4:41:51 PM (IST)

இந்தியை திணித்து தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ்: சீமான் குற்றச்சாட்டு
சனி 24, ஜனவரி 2026 3:59:25 PM (IST)

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

சத்துணவு பணியாளர்களுக்கான புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சனி 24, ஜனவரி 2026 11:53:11 AM (IST)

திமுகவின் கொடூரமான பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
சனி 24, ஜனவரி 2026 11:33:23 AM (IST)