» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 12:08:26 PM (IST)
மேட்டூர் அருகே கால்பந்து போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று கூறி மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் முதல் பாதியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சரிவர விளையாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில்அமர வைத்து கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.
அப்போது, பள்ளி ஆசிரியர்களும் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர்.2-ம் பாதியில் சிறப்பாக ஆடினர்: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், இறுதிப் போட்டியில் 2-ம் பாதியில் சிறப்பாக ஆடி கொளத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை தாக்கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு விதித்த தடை நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஜூலை 2025 4:27:01 PM (IST)

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!
வியாழன் 10, ஜூலை 2025 12:08:58 PM (IST)

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கரில் கைது
வியாழன் 10, ஜூலை 2025 12:03:53 PM (IST)

தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-ம் தேதி தேர்வு: டிஆர்பி அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 11:44:41 AM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
