» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசியல் பயணம்: நடிகர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. அறிவுரை!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:36:02 AM (IST)
நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை வழங்கி உள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய்க்கு தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. அறிவுரை வழங்கி உள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனிமொழி எம்.பி.யிடம், நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘சிறு வயதில் இருந்தே நடிகர் விஜய்யின் குடும்பத்தினருடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்து வருகிறது. இன்றைக்கு எல்லோரும் கொண்டாடக்கூடிய மிகப்பெரிய நட்சத்திரமாக வருவதற்கான உழைப்பு, பாதையை அவர் தெளிவாக புரிந்திருந்ததால் முடிந்தது. எனவே அவர் அதே தெளிவோடும், உழைப்போடும் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் 'என்று கூறினார்.
மேலும் கனிமொழி எம்.பி.யிடம் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றியும், தூத்துக்குடி மக்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு கனிமொழி எம்.பி. அளித்த ருசிகர பதில்கள் வருமாறு: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதித்தொகையை தந்துவிட்டால் பிரதமர் மோடியை நிச்சயமாக நான் மனதார பாராட்டுவேன். நான் அப்பாவிடம் (கருணாநிதி) நிறைய விசயங்களுக்கு சண்டை போட்டிருக்கிறேன். நான் ஒருமுறை டெல்லி செல்லும் போது விமானம் தாமதாகி விட்டது. இறங்கும்போது என்னை திட்டினார்கள். நானும் வாக்குவாதம் செய்தேன். தற்போது நான் விமானத்தில் வந்து இறங்கும்போதெல்லாம் வந்துவிட்டீயா...? என்று கேட்பதற்கு அவர் இல்லையே என்று நினைக்கும்போது, மனதில் வலியாக இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் என்பதையும் தாண்டி எனக்கு மிகவும் பாசமான அண்ணன். நான் நாடாளுமன்றத்தில் பேசியதை பார்த்துவிட்டு எனக்கு குறுந்தகவல் அனுப்பினார். நான் வெளியே வந்து போன் செய்தவுடன், அண்ணனுக்குரிய மகிழ்ச்சியில் பாராட்டினார். அது குரலில்தான் தெரியும்.
ஜெயலலிதாவிடம் எதற்கும் அஞ்சாத ஒரு பண்பு இருந்தது. அதனை நான் என்றைக்கும் பாராட்டுவேன்.பின்னர் அவரிடம் அரசியலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு, அரசியலில் உதயநிதி ஸ்டாலினிடம்தான் மற்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கனிமொழி பதில் அளித்தார்.
என்னதுAug 14, 2024 - 08:39:49 AM | Posted IP 172.7*****