» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளி 9, மே 2025 4:44:33 PM (IST)

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மின்னஞ்சலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் திடலில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory