» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)
குளச்சல் அருகே பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனிஸ் (25), வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உண்டு. தனிஸ்க்கும் ஒரு பிளஸ்-2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி பள்ளி முடிந்ததும் மாலையில் தட்டச்சு பயிற்சிக்கு செல்லும் போது அவரை தனிஸ் சந்தித்து பழகி வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று தனிஸ் சிறுமியிடம் குளச்சல் அருகே உள் பஸ் நிறுத்தத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு வந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அருகே உள்ள தோப்புக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என தனிஸ் மிரட்டி அனுப்பி வைத்தார்.
இதன்பின்பு மாணவியின் நடவடிக்கையில் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டது. இதை கவனித்த தாயார் அவரிடம், ‘ஏன் இப்படி இருக்கிறாய்?’ என கேட்டார். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி விசாரணை நடத்தி தனிஸ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே தனிஸ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு விதித்த தடை நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஜூலை 2025 4:27:01 PM (IST)

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!
வியாழன் 10, ஜூலை 2025 12:08:58 PM (IST)

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கரில் கைது
வியாழன் 10, ஜூலை 2025 12:03:53 PM (IST)

தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-ம் தேதி தேர்வு: டிஆர்பி அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 11:44:41 AM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
