» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-ம் தேதி தேர்வு: டிஆர்பி அறிவிப்பு

வியாழன் 10, ஜூலை 2025 11:44:41 AM (IST)

தமிழகத்தில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இயற்பியலில் 233, கணிதத்தில் 232, தமிழில் 216, ஆங்கிலம் 197, வணிகவியல் 198, வேதியியலில் 217 காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. அறிவிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory