» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

பேச்சிபாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிபாறை ஊராட்சிக்குட்பட்ட அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் முன்னிலையில் இன்று (18.07.2025) திறந்து வைத்து, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில -
தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் மீது மிகுந்த பற்று கொண்டு அவர்களை சமுதாயத்தில் சிறந்த குடிமக்களாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கென பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மலைவாழ் பழங்குடியின மாணவ மாணவியர்கள் பள்ளிப்படிப்புடன் நின்று விடாமல் உயர் கல்வி பயின்று வாழ்வில் மேம்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில் பேச்சிப்பாறை பழங்குடியின உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் கூடுதல் வகுப்பறைகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த அளவில் பேச்சிப்பாறை பழங்குடியின உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியை போன்று மலைவாழ் மக்களுக்கென பத்துக்காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் மணலோடை அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி, வாழையத்துவயல் உள்ளிட்ட பள்ளிகளில் இலவசமாக மாணவ மாணவியர்கள் தங்கி, படிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.
கடந்த 2024-2025 ம் கல்வியாண்டில் பேச்சிப்பாறை அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பில் 98 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களும் பள்ளி படிப்போடு நின்று விடாமல் உயர் கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற கேட்டுக்கொள்கிறேன்.
இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வியில் சிறந்தவர்களாக விளங்குவதோடு தங்களது சமுதாயத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவிகள், விடுதி வசதிகள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வெளிநாட்டுக்கு சென்று படிப்பதற்கான ஊக்க தொகைகள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்திய தலைமை காவலர் கைது!
சனி 19, ஜூலை 2025 10:37:04 AM (IST)

கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்
சனி 19, ஜூலை 2025 10:32:48 AM (IST)

திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:35:30 PM (IST)

ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார் என்பது 2 நாளில் அம்பலமாகும்: ராமதாஸ் பேட்டி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:20:08 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்தவனை சுட்டுக் கொல்ல வேண்டும்: தாய் ஆவேசம்
வெள்ளி 18, ஜூலை 2025 4:40:58 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை!
வெள்ளி 18, ஜூலை 2025 3:09:42 PM (IST)
