» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சீமை கருவேல மரங்களை அகற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 30, ஆகஸ்ட் 2025 11:25:46 AM (IST)
‘சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார்பிலும், நீர்வளத்துறை சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 517 கிராமங்களில் சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நீர்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுவதுடன் அவை மீண்டும் முளைக்காமல் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தற்போது சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள கிராமங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், ஒவ்வொரு மாதமும் சில கிராமங்களை சீமை கருவேல மரங்கள் அற்ற கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3 வாரம் கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)
