» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:14:55 AM (IST)
தூத்துக்குடி தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

பொட்டலூரணியில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மீன்கழிவு ஆலைகளை மூட வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 250 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
அதில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் எடுக்கப்படவில்லை. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் பணியில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்க்கப்பட்டு இருந்தால், அதற்கான ஆதாரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
அமெரிக்கா இந்தியா மீது விதித்து உள்ள 50 சதவீதம் வரிவிதிப்பு என்பது ஒரு யுத்தம் ஆகும். இது இந்தியாவின் இறையான்மை, கவுரவம் சார்ந்த விஷயம். இந்த விஷயத்தில் இந்தியா துணிந்து நிற்க வேண்டும். சுங்கச்சாவடியில் பெரிய மோசடி நடக்கிறது. இது குறித்தும் ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும், என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)
