» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகை திருடிய கிளீனர் சிறையில் அடைப்பு: மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:18:21 AM (IST)

ஆறுமுகநேரி அருகே ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகையை திருடிய வழக்கில் கைதான கிளீனர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவர் தங்க நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் செய்யது முகைதீன் நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஆரிப் அடிக்கடி சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் நகை பார்சலை முகைதீனுக்கு கொடுத்து அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் ஆரிப் கடந்த 8-ந் தேதி இரவில் 49 பவுன் நகைகள் அடங்கிய பையை சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து உடன்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் டிரைவராக இருந்த தட்டார்மடம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.

அந்த நகையை பஸ் காயல்பட்டினம் சென்ற உடன் அபுதாகிர் என்பவரிடம் ஒப்படைக்குமாறு டிரைவரிடம் கூறியிருந்தார். இரவில் அந்த பஸ் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டது. மறுநாள் காலையில் ஆறுமுகநேரி அருகேயுள்ள சாகுபுரத்திற்கு வந்தபோது டீ குடிப்பதற்காக பஸ்சை டிரைவர் சிவபாலன் நிறுத்தினார். அப்போது கிளீனர் மகேஷ், 49 பவுன் நகை பார்சல் இருந்த பையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 பவுன் தங்க நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. அவரை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory