» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி

புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என வீரவசனம் எல்லாம் பேசிவிட்டு தற்போது அமித்ஷாவை சந்தித்துள்ளார் இ.பி.எஸ். தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது.

இ.பி.எஸ். அடிக்கும் கூத்துக்களை எல்லாம் ராஜதந்திரம் என கூறி கொண்டிருந்தனர்.  இ.பி.எஸ். பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியானது. அ.தி.மு.க. தொண்டர்கள் இனிமேலும் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம். இரட்டை இலையை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றுகிறார் இ.பி.எஸ்.

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை. தென்மாவட்ட மக்களை சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார் இ.பி.எஸ். இ.பி.எஸ். நினைப்பதுபோல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory