» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் எட்டு சரித்திர பதிவேடு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றத்தை தடுக்கவும் குற்றம் நடவாமல் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து உட்கோட்ட காவல் உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெசவாளர் காலனி சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் வருண் (37), கீழ் ஆசாரி பள்ளம் பெஞ்சமின் மகன் கிறிஸ்டோ வினேஷ் (33), அருகுவிளை கடற்கரையாண்டி மகன் லிங்கம் (45), புத்தன் துறை கண்ணுத்துரை மகன் கண்ணன் (38), மேலும் ரஞ்சித் பிரேம், அஜீஸ், பிரசாந்த் ஸ்டாலின் என்ற சாலி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
புதன் 15, அக்டோபர் 2025 12:26:15 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய்தான் முக்கிய காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
புதன் 15, அக்டோபர் 2025 12:05:32 PM (IST)

மோசடி ஆவணப் பதிவுகளை தடுக்க நடவடிக்கை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை
புதன் 15, அக்டோபர் 2025 10:38:37 AM (IST)

நாலுமாவடியில் ரூ.30 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை: மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்
புதன் 15, அக்டோபர் 2025 10:10:54 AM (IST)

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவை நியமிக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கெடு
புதன் 15, அக்டோபர் 2025 8:43:17 AM (IST)
