» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகர் பகுதியில் அரசு கலை கல்லூரி : தமிழக முதல்வருக்கு மாணவர் சங்கம் கோரிக்கை!

திங்கள் 27, அக்டோபர் 2025 5:28:30 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாவட்டத் தலைவர் மாடசாமி, மாவட்டச் செயலாளர் ராம் குமார் ஆகியோர் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டுமென்று மாணவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து போராடி வருகின்றனர். 

மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பினை முடித்தவுடன் உயர்கல்விக்காக அரசு கலைக் கல்லூரி இல்லாத காரணத்தினால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சேரக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் ஏழை எளிய மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை குறைந்த கட்டணத்தில் நிறைவேற்றுவதற்கு அரசு கலைக்கல்லூரி தேவைப்படுகிறது.

கோவில்பட்டி நகரத்தில் தனியார் தொழில்துறை பயிற்சி நிறுவனம் மட்டும் இயங்கி வரும் நிலையில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் அமைப்பது ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கள் தொழிற்முறை திறன்களை வளர்த்து வேலை வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே முதல்வர் இந்த இரண்டு மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory