» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST)



தூத்துக்குடியில், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில்: முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் வாரம் ஓருமுறை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதையும தவிா்த்து உங்களுடன் ஸ்டாலின் பகுதி சபா கூட்டம் என மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு இத்தனை முகாம்கள்நடைபெற்றாலும் மாநகராட்சி இணையதளம் வாயிலாகவும் பல்வேறு புகாா்கள் குறைகள் வருகின்றன. 

அதையும் தீா்த்து வைக்கும் பணியில் நாம் இருக்கிறோம் மக்கள் தௌிவாக இருக்கிறாா்கள். கடந்த 19 20, 21 ஆகிய 3 தேதிகளில் பெய்த கனமழையால் எங்கும் மழைநீர் பொிய அளவில் தேங்க வில்லை. ஒரு சில இடங்களில் தான் தேங்கியது அதையும் மின்மோட்டாா் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. கோக்கூா் குளம் அமைந்துள்ள பகுதி தாழ்வான பகுதி அதனை சாிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு மண்டலத்தில் அதிக அளவில் காலி மணைகள் உள்ளது அங்கு தான் மழைநீர் தேங்குகிறது. 

நவம்பர், டிசம்பர், ஜனவரி 10 வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலத்தடி நீர் உயா்ந்துள்ளது. வாா்டு 16, 17, 2 ஆகிய பகுதிகள் நீர் தேங்கியுள்ளது. ஆதிபாராசக்தி வழியாக நீர் வௌியே செல்வதற்கு வழியில்லை இதனால் புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டு எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போா்டு வழியாக கடலுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

பி&டி காலனி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பாதாள சாக்கடை பணிகளும் நடைபெற்றதால் 5 அடிக்கு தோண்டப்பட்டது. அதுவும் தற்போது சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 974 சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. தற்போது சண்முகபுரம் ஜாா்ஜ் ரோடு சந்தை ரோடு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வாய்கால் கட்டும் பணி நடைபெறுகிறது என்று பேசினார்.

எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில்: தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே பத்திரிகையாளர்களுக்கு மாநகராட்சி பகுதியில் மானிய விலையில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் திண்பண்டகள் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக சார்பில் வலியுறுத்தி பேசினார்.

அதற்கு, கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். 16, 17, 18, 33, 34 ஆகிய வார்டு பகுதிகளில் மாநகராட்சிக்குரிய பூங்கா மற்றும் சமுதாய நலக் கூடங்கள் சில ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. அதனை முறைப்படுத்தி விரைவில் மாநகராட்சி கையகப்படுத்தும். அசோக் நகர் பகுதியில் உள்ள ஓடை கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்தது. 

பண்டுகரை சாலை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஓடையும் சீரமைத்து அகலப்படுத்தும் பணி ஜனவரியில் தொடங்கும். தெரு மின்விளக்கை பொறுத்த வரையில், 25 வால்ட், 30 வால்ட் போன்றவற்றில் வெளிச்சம் குறைவு காரணமாக 90 வால்ட் மின்விளக்குகள் பொருத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதி விரைவடைந்து வருவதால் 1288 மின்விளக்குகள் தேவைப்படுகிறது என்று அரசுக்கு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். 

விரைவில் வந்ததும் தேவையான அனைத்து பகுதிகளுக்கும் மின்விளக்குகள் பொருத்தப்படும். சில பகுதிகளில் ஆய்வு செய்யும் போது அந்த பகுதியில் தண்ணீர் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். சாலை அமைக்கும் போது அதற்கான வாட்டத்தை மாமன்ற உறுப்பினர்கள் முன்னின்று கவனிக்க வேண்டும். அவர்லண்ட் தனியார் ஒப்பந்தம் மூலம் தூய்மை பணியாளர்கள் குப்பை மற்றும் கால்வாய் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலுள்ள குறைபாடுகளும் சரிசெய்யப்படும். 4 மண்டலத்திற்கும் ஆணையர்கள் உள்ளனர். 

குடிநீரை பொறுத்தவரையில் பல நீர்தேக்க தொட்டிகள் மூலம் முறைப்படுத்தி குடிநீர் வழங்கி வருகிறோம். கடந்த காலத்தில் ரூரல் மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் குறைகள் இருந்தது. தற்போது குடிநீர் பிரச்சனை இல்லை. சண்முகபுரம் பகுதியில் புதிதாக கருப்பு பைப் பதிக்கப்பட்டு 3600 குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒருநாள் விட்டு மற்றும் தினசரியும் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றித் தரப்படும். 

இன்னும் 10 நாட்கள் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை தீவிரமாக மழை நீடிக்கும். அதையும் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. 15வது வார்டுக்குட்பட்ட பகுதியான மாவட்ட தொழில்மையம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் இபி காலனி வழியாக தான் காட்டாற்று வெள்ளம் வருகிறது. இனி அதுபோன்று குறைபாடுகள் ஏற்படாது. அதுபோல் கோரம்பள்ளம் குளம் நிரம்பி விழுந்தால் கடலுக்குச் செல்லும் 12 கி.மீ தூரம் வழித்தடம் நல்ல நிலையில் இருந்து வருகிறது என்று பேசினார்.

கூட்டத்தில், இணை ஆணையர் சரவணக்குமார், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, உதவி ஆணையர் வெங்கட்ராமன்;, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், கண்ணன், ராஜபாண்டி, மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார், இசக்கிராஜா, அதிஷ்டமணி, சரவணக்குமார், ரெங்கசாமி, பொன்னப்பன், சரண்யா உள்பட மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory