» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 11:14:40 AM (IST)
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு: சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ம் தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12657), அதற்கு மாற்றாக சென்னை சென்டிரலில் இருந்து மறுநாள் (27-ம் தேதி) அதிகாலை 1.30 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.
சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (22649), அதற்கு மாற்றாக மறுநாள் (27-ம் தேதி) அதிகாலை 1.40 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.
எழும்பூரில் இருந்து வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635), வழக்கமாக மதுரை செல்லும் நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
போத்தனூரில் இருந்து வருகிற 21-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரயில் (06124), வழக்கமாக சென்டிரல் வரும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
போத்தனூரில் இருந்து வருகிற 28-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரயில் (06124), வழக்கமாக வரும் நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 17-ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (06151), வழக்கமாக கன்னியாகுமரி செல்லும் நேரத்தைவிட 25 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19,21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் குண்டக்கல் செல்லும் சிறப்பு ரயில் (06091), வழக்கமாக செல்லும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 21-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12691), வழக்கமாக நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24-ம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12601), வழக்கமாக நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்
வியாழன் 13, நவம்பர் 2025 11:24:39 AM (IST)

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000? - தமிழக அரசு விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 10:27:53 AM (IST)

தேசிய தலைவர் தேவர் பெருமான் படத்தை தடை செய்யக் கோரி ஹரிநாடார் வழக்கு!
புதன் 12, நவம்பர் 2025 5:12:53 PM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி : உதயநிதி வாழ்த்து!
புதன் 12, நவம்பர் 2025 12:31:49 PM (IST)

சமூக நலத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
புதன் 12, நவம்பர் 2025 11:56:17 AM (IST)




