» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்
வியாழன் 13, நவம்பர் 2025 11:24:39 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நவம்பர் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அன்புமணி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார் செல்வ சித்ரா, அறிவழகன், அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், பி. சாந்தி, எஸ் பாலசந்தர், பி எம் ஜெயலட்சுமி, என்.மகேஸ்வரன், எல். ஆர் மந்திரமூர்த்தி கே. முருகேஸ்வரி, மகாராஜன் பால குருசாமி, தொழிலதிபர்கள் டிஏ தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகரன், கே.ஏ.பி. சீனிவாசன், ஓஎம் முருகன் யாதவ், முருக இசக்கி, மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், பிஜேபி ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்டு 4 ரத வீதி வழியாக வந்து மீண்டும் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தின் போது கரகாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு பாரம்பரிய மேள தாளங்களும் இடம்பெற்றன.
தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயில் ஸ்ரீ ஜலதுர்கா வார வழிபாடு டிரஸ்ட் மற்றும் அழகர் ஜுவல்லர்ஸ் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. சைவ வேளாளர் மண்டபத்தில் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் சங்கரி தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம், ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 11:14:40 AM (IST)

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000? - தமிழக அரசு விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 10:27:53 AM (IST)

தேசிய தலைவர் தேவர் பெருமான் படத்தை தடை செய்யக் கோரி ஹரிநாடார் வழக்கு!
புதன் 12, நவம்பர் 2025 5:12:53 PM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி : உதயநிதி வாழ்த்து!
புதன் 12, நவம்பர் 2025 12:31:49 PM (IST)

சமூக நலத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
புதன் 12, நவம்பர் 2025 11:56:17 AM (IST)




