» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பள்ளத்தில் பதிந்து நின்ற லாரியால் பரபரப்பு : போக்குவரத்து பாதிப்பு

சனி 15, நவம்பர் 2025 8:22:32 PM (IST)



தூத்துக்குடியில் கழிவு மணல்களை ஏற்றி வந்த லாரி சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் பதிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரம் மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளின் ஓரம் தெருக்களின் ஓரமாக கழிவு நீர் ஓடை அமைப்பதற்கு வசதியாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இவ்வாறு தோண்டப்படும் இடத்தில் கிடைக்கின்ற மணல் அனைத்தும் பள்ளமான இடங்களுக்கு கொண்டு சென்று பள்ளங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று தனியார் லாரி மூலம் இந்த மணலை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் கார்த்திக் என்பவர்  டிப்பர் லாரியை ஓட்டி வந்தபோது பூபாலராயர்புரத்திலிருந்து தாளமுத்து நகர் நோக்கி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் சாலையில் சாலையின் நடுவே போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் மூடி அருகே லாரி வந்த போது கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் கனமழை காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் மணல் இறங்கி வெற்றிடமாக இருந்துள்ளது.

இந்த நேரத்தில் அதிக பாரத்துடன் வந்த லாரி அந்த இடத்திற்கு வரும்போது பெரும் குழி ஏற்பட்டு குழிக்குள் பின்புற சக்கரம் உள்ளே இறங்கி மாட்டிக் கொண்டது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது லாரியை இரண்டு ஜேசிபி மூலம் பள்ளத்திலிருந்து தூக்கி எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

பாதாள சாக்கடைக்கு தோண்டி அதற்கான பைப்புகள் பதிக்கும் பணி நடைபெறும் போது மேலே மணலை போட்டு மூடும் போது சரியான முறையில் அழுத்தம் கொடுத்து மணலை நிரப்பு இருந்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டிருக்காது. ஒப்பந்ததாரர்கள் அப்பகுதியில் கிடந்த மணலை வைத்து நிரப்பி மேலே தார் ஊற்றி மேற்பூச்சி வேலை செய்ததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory