» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்து பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதேபோல் நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிஉள்ளது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அவசரகாலங்களில் உடனடியாக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. பேரிடர் மீட்புக் குழுக்களும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தகவல்கள் மற்றும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பேரிடர் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு மீட்புப் படையினர் அடங்கிய குழுக்கள் 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மைத் துறை, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அவர்கள் மூலம் முறையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory